சிலுவையும் செங்கோலும்!

ஏசுபிரான் சொன்னார் “இடதுபக்கக்
கன்னத்தில்
கூசாதடித்தவர்க்கே
கொடுப்பாய் வலக்கன்னம்!
நேசிப்பாய் நெஞ்சார நின்னயலில் உள்ளவனை
பூசிப்பாய் மற்றுயிரைப் புண்ணியனே என்று கண்டு
என்னதான் குற்றம் இழைத்தாலும் எவரையும்
மன்னிப்பாய்! என்மகனே, மன்னிப்பாய்!” என்று
உண்மையென்று ஆத்மா உடைய சிலர் மகிழ்வார்

விண்ணர்கள் சொல்வார், விஷமச் சிரிப்போடு :
ஆத்மாவாம் ஆத்மா! அடுப்படியில் போடுகொண்டு
பூத்த புதுயுகத்தின் புத்தி அறுவடையை
பார்த்துச் சகிக்காப் பழமை அழுகிறது
ஆத்மாவாம் ஆத்மா!
அடுப்படியில் போடுகொண்டு!
மன்னித்தல் ஒன்றும் மனிதன் கலையன்று!
மன்னித்தல் மாந்தர் இயலாமை! மண்டைகளில்
நுண்மை அறிவால் நுணுகிமிக ஆராய்ந்து
கண்டறிந்து ஆளும் கலைமேன்மை என்றாகும்!

மீண்டும் சிலுவைகளே வேண்டாம்! இனியுலகில்!
ஆண்டார் விருப்பமோ செங்கோல்!
சிலுவையன்று!
ஆண்டவனார் கூடஅதற்குள்!


        

Leave a Reply