வி.ஸி.மெம்பர் காசிநாதர்!

ஆரெண்டு தெரியுமா…? என்ன விளங்கல்லப் போல.. ஓம் ஓம். எங்கட படுவான் கரையில பேரான கிராமச்சங்கம்;. அதில ஒம்பதாம் வட்டாரத்துக்கு நான்தான் நம்பர்! அதென்னத்தப் பேசி ஏதெண்டு சொல்லுவன்? ஒரு எலச்சன் நடத்தி முடிக்கிறத்துக்குள்ள மனிசண்ட சீவன் போயிரப் பாக்குது. பின்னென்ன பின்ன… எத்தின நாளா எடுத்த எடுப்பிது சோறா? தண்ணியா? வீடா? வாசலா? நித்திரையா? நிமையா? நாயோட்டம்! தொங்குகால் பாச்சல்! கடப்பேறி ஏறி கால் பாதி தேஞ்சு போச்சி! ஹ_ம்… என்னவோ ஆண்டவன் கண்ண முழிச்சான். இல்லாட்டிப் பின்ன அந்த ஆண்டவனும் பட்டினிதான் …

வண்ணக்கர் கண்ணாப் போடி

தவறணைக்குள்ள பிறந்து குடிகுடியெண்டு குடிக்கயள்… இன்னும் போத்தலோட அண்ணாந்து ஊத்தத் தெரியுதில்ல.. நீங்கெல்லாம் என்ன குடிக்கயள்…சை..! நடுச்சாமத்தில – கோயிலுக்குப் பின்னால இந்தச் சூரப்பத்தக் காட்டுக்குள்ள.. கிளாசுக்கும் கோப்பைக்கும் எங்க போறது? எனக்கெண்டால் அந்த மண்ணாங்கட்டி ஒண்டும் தேவல்ல! ஆறு போத்தலையும் அண்ணாந்து ஊத்திப் போட்டு அசையாமல் இருப்பன். இந்தப் பனம்பழ மூளுக்குள்ள ஊத்தி அடியுங்க. சோக்கான சாமான்! ஒரு போத்தல் கொள்ளும். எப்பிடி எண்ட மூள? வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். என்ன ரெட்டத்தலையன் எண்டு சொல்றது இதுக்குத்தான் கண்டியளோ! எதுக்கும் ரெட்டமூளயப் போட்டுத்தான் …

போடிமகள் பொன்னம்மா

ஓமெண்றன்…. ஓலகங் கெட்ட கேட்டுக்கு! எனக்கிந்தக் கத காலுகள் புடிக்காது கண்டயளோ! என்ன கண்டறியாத கதகாலுகள்…. சொறிஞ்சிக்க நகமில்லாமக் கெடந்ததுக்கெல்லாம் ஒள்ளுப்பம் தராதலம் வந்திற்றெண்டாப்பல… இதுகளும் சந்தி சவையில பந்தி பாவாடையில மனிசன் மாஞ்சாதியெண்டு ஏறத்துவங்கிற்றாப்பல. இந்த ஊர உண்டாக்கினவன் ஆரு…? இதக்கட்டியாண்டவன் ஆரு..? நெனச்சிப் பாக்குதுகளா… ஓங்கா… காலங்கெட்ட கேட்டுக்கு! அதுகளுக்கு வந்த பவுசும் தாக்கத்தும்! ஓமெண்றன்… வெள்ளக் காச்சட்டையும் வீடு வளவும் வெள்ளாமையும் வந்திற்றெண்டாப்பல… இதுகள் பட்ட சிறுமானியங்கள் ஒண்டும் எங்களுக்குத் தெரியாதாகா… நாங்க எந்தச் சிங்கப்பூர் சீமையில இருந்து வந்தகா…ஆ? …

‘பசுநெய்’ விசுவலிங்கம்

நீங்க என்னப் பற்றி என்ன நினைச்சாலும் சரிதான் அதப்பற்றி எனக்கொண்டும் கவல கிடையாது. ஏன்? எண்டு கேப்பியள். அது தான் தெரியுமே நம்மட போக்கு ஒரு தனிப்போக்கு எதுக்கும் கவலப்படாத போக்கு! அண்டைக்குப் பாருங்க ஏறாவூர்ச் சந்தியில ஒரு கடக்காறன் வாற வரத்தில… வஸ்ஸ_க்குள்ள இருந்த என்ன வெளியால இழுத்துப் போட்டு மொங்கு மொங்கெண்டு மொங்கிப் போட்டான். நீங்கெண்டால்.. இன்னேரம் சவம்! நிண்டு பிடிச்சனா இல்லையோ? இந்த மண்ணாங்கட்டி உடம்பையும் தந்து இந்தப் பூமியில ஆண்டவன் நம்மப் படச்சுட்டது என்னத்துக்குத்தான் பின்ன? ஆரும் சோட்டப்பட்டவனுகள் …

தலம வாத்தியார் தம்பிராசா

தலம வாத்தியார் வேல பாக்கிற தெண்டால் அது லேசான காரியம் இல்லப் பாருங்க. பெரும் பொறுப்பு! உங்கட ஐடியா என்னவோ எனக்குத் தெரியாது. என்னப் பொறுத்தவரையில சொல்றன் அது பெரும் பொறுப்பான ஒரு பதவி! ஒரு சில தலம வாத்திமார் சொல்றாங்க.. அது மிச்சம் சிம்பிள் எண்டு! அது சிலவேளையில உண்மையாகவும் இருக்கும். அப்படிச் சொல்றவங்க கொஞ்சம் அறிவு ஆற்றல் அது இது எண்டு கொஞ்சம் மூளையும் உள்ளவங்க. இவங்கட அறிவும் ஆற்றலும் மூளையும்.. இந்தக்காலத்தில செல்மதியாகாது கண்டீங்களோ! இப்ப உத்தியோகம் – அதுவும் …

எழுத்தாளர் எலிக்குஞ்சனார்

என்ன மாஸ்டர் இப்படி? எங்கே போய்விட்டு வருகிறீர் ஓ..! இன்றைக்கு வெள்ளிக் கிழமையா.. சரிதான்… எனக்கும் இன்று கயிறுதிரிக்கிற வேலை கிடையாது.. அதுதான் இப்பிடி வாசிகசாலைப் பக்கம் போய்விட்டு வரலாம் என்று புறப்பட்டேன். இப்பொழுது வாசிகசாலை பலே ஜோர்! ஏனென்று கேட்டால் அங்கு இப்பொழுதான் தரமான ஏடுகள் தருவிக்கப்பட்டு வருகின்றன. அதாவது ‘வல்லி’ ‘நஞ்சருவி’ ‘ஜல்தி’ ‘குறுக்குவழி’ ‘அலம்பல்’ ‘அரட்டை’ ‘நஞ்சு’ போன்ற பத்திரிகைகள் சுடச்சுடக் கிடைக்கின்றன. கடைசியாய் வந்த ‘ஜல்தி’யி;ல் ஆசிரியர் புளுகு நாவியார் பக்கத்தில் எனது கண்டனச் சிறுகதை ஒன்று வெளியாகியுள்ளதே! …