பாவம் மாஸ்டர் (குறும்புக் கதை)

“பிள்ளைகளே. இன்று நான் சொல்லப்போகும் குறும்புக் கதையைக் கேட்டுவிட்டு உங்களில் யாராவது சிரிக்காமல் இருந்தால் முதுகுத் தோலை.. உரித்து விடுவேன்! கவனம்!” இவ்வாறு காப்புக் கூறிக் கதையைத் தொடங்கினார் க .க. க. ஆசிரியர். முதலாம் கானாவுக்கு கறுப்புச் சுறுட்டு என்றும், இரண்டாம் கானாவுக்கு கடலைக் கொட்டை என்றும், மூன்றாங் கானாவுக்கான கந்தப்பர் என்ற அவரது இயற்பெயரையும் கூட்டினால் கறுப்புச் சுறுட்டுக் கடலைக் கொட்டைக் கந்தப்பு மாஸ்டர் என்று அவரை நாம் அழைப்போம்! ஆசிரியர் க.க.க. சிரிக்காத விஷயம் இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. …

ரகசியம் (குறும்புக் கதை)

மாசிலாமணி ஆசிரியர் என் கூடப் படிப்பிக்கும் வயதான ஆசிரியர். மகா உத்தமர். உலகத்திலே நடைபெறும் குழப்பம் குத்து வெட்டுக்களுக்கெல்லாம் மதுவும் மாதருமே காரணம் என்று அடித்துப் பேசும் அவர் தனது ஐம்பது வருட உலக வாழ்வில் ஒரு நாளாவது மதுவைத் தீண்டியது கிடையாது. மனைவியை அன்றி மறு மாதரை மனத்தாலும் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. “இவர் குரூபியாக பார்த்த பெண்கள் அருவருக்கக்கூடிய அவலஷ்ணமாக இருப்பதே அவர் இப்படி யோக்கியராக இருக்கக் காரணம்” என்று அவருடைய எதிரிகள், அதாவது மதுவும் மாதரும் ஆண்டவன் வழங்கிய பெரும் …

சபலம்

வாருகலால் கோலமிட்ட அந்த வாசல் அப்படியே அழியாமல் குலையாமல்.. அழகாகத் தான் இருந்தது. ஆளில்லா மங்கையிடம் அழகிருந்து ஆருக்கு என்ன பயன்? குழந்தைகளின் மென்பாதங்கள் முத்தமிடாத அந்த வாசலின் அழகு யாருக்கு வேண்டும்! சாய்மான நாற்காலியில் கால்களை நீட்டியபடி உடம்பைச் சாய்த்துக் கிடந்த நல்லதம்பி மாஸ்டர் சிந்தனையை முறித்துவிட நினைத்தவர் போல மறுபக்கம் சாய்ந்து படுத்தார். மேற்கே ஒழுங்கை ஓர வேலியில் நிற்கும் புன முருங்கையின் கீழ் பொன்தோடுகள் போல பூக்கள் சொரிந்து கிடந்தன. என்றோ ஒருநாள் பண்டித பரீட்சைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த …

பிராயச்சித்தம்

அன்று முழுவதும் கடமைக்காக வகுப்பில் அரட்டை அடித்துவிட்டுத் தன் விடுதிக்குச் சென்றான் நடராஜன். சாப்பிடக்கூட மனமின்றிச் சாய்ந்தான் ஒரு நாற்காலியில். அன்று காலை தலைமை ஆசிரியர் கூறிய வார்த்தை அவன் காதுகளிற் சதா முழங்கிக் கொண்டேயிருந்தது. ‘நல்லம்மா என்ற பெண்ணாசிரியை ஒருத்தி நாளை கடமையை ஏற்க பள்ளிக்கூடத்திற்கு வருகிறார்’ வரப்போகும் ஆசிரியையின் பெயரையும் ஊரையும் கேட்ட அளவில் நடராஜனது உள்ளத்தில் ஏதோ ஓர் இனந்தெரியாத அதிர்ச்சி. பேயறைந்தவன் போல நாற்காலியில் பேசாதிருந்தான் அவன். சிந்தனை சுமார் மூன்று வருடங்களுக்கு முன் தான் நடாத்திய கலாசாலை …

பட்டமரம்

உலகிலே நல்லவர்கள் ஒரு சிலர் தான் வாழ்ந்தார்களாம் அன்பு கருணை சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவை தான் அவர்களுடைய வாழ்க்கை இலட்சியங்களாம். பொல்லாத காலம் அவர்களுக்குக் கல்லறைகளைப் புகலிடமாக அளித்துவிட்டதாம்! நான் ஒரு இரட்டைமரம். பட்டுப்போயிருக்கிறேன். இன்று பெருமைக்காக உளறவில்லை. மேலே குறிப்பிட்ட நல்லவர்கள் பட்டியலில் நானும் ஒருவன். ஆனால் எனக்காக எவரும் கல்லறைகள் கட்டமாட்டார்கள். உயிரோடிருக்கும் பொழுது உலகுக்கு வேண்டியவர்களை ஆதரித்து அவர்களை வாழச் செய்யாத இந்த மனித இனம் அவர்கள் செத்து மடிந்தபின் ஞாபகச் சின்னம் உருவாக்கித் தங்கள் நன்றி கெட்ட செயலை …

ஒட்டுறவு

‘நான் ரெண்டு மாசத்துக்கு முந்தியே சொல்லிப் போட்டன். கணக்கு முடியவந்து கூட்டித்துப் போயிருவன் எண்டு! பெட்டேய் அரியம்.. என்ன செய்யிறாய்? ஐயாட்ட அம்மாட்டச் சொல்லிப் போட்டு… கெதியா வெளிக்கிடு பாப்பம். இருட்ட முந்தி போய்ச்சேர வேணும்!’ என்றோ ஒரு நாள் சவடால்ற சாமித் தம்பி வந்து இப்படித் தான் செய்யப் போகிறான் என்பது ஏலவே தெரிந்த விஷயந்தான்! அது நடக்கப் போகிறது. ‘கௌரி.. இஞ்ச பாருங்க… அச்சாக் கௌரி! கண்ணக் காட்டுங்க.. இஞ்சப் பாருங்கவன் அக்கா… ஐயா.. ஐயா.. ஓடி வாருங்கவன். கௌரிக் குஞ்சு …

தெளிவு

கந்தோருக்குப் போக வேண்டியதில்லை. காலிமுகக் கடற்கரைக்கு காற்று வாங்கப் போகலாம் என்பதாலோ, புதிதாக திரையிடப்பட்டிருக்கும் தமிழ்ப்படம் பகல் காட்சியைப் பார்த்துவிடலாம் என்பதாலோ, ஞாயிற்றுக்கிழமை அவனுக்கு சந்தோஷநாள் ஆகி வரவில்லை. காலையில் எழுந்ததும், வளமான நிலத்திலே முளைத்து நிற்கும் ஊசிப்பயிர் வேளாண்மை போல, என் முகத்திலே வளர்ந்து நிற்கும் இந்த மீசை மயிர்களையும் வழித்து ஒதுக்கிச் சுத்தம் பண்ணவேண்டுமே என்ற கவலை இன்றைக்குக் கிடையாது! அதனால் ஞாயிற்றுக் கிழமை என்றால் ஷேவ் எடுக்காத சந்தோஷ நாள் என்பது என் கருத்து! தடிப்பான முரட்டுத் துணிக்குள்ளே உரிமட்டைகளை …

நாணயம்

‘என்ன மனே இந்நேரத்தில! பெட்டியும் தலகாணியோடயும் வந்தெறங்கிறாய். ஒனக்கு லீவுக்கு இன்னம் ரெண்டு மாத்தயக் காசு கட்ட வேணுமே?’ இரவு ஏழரை மணி பஸ்ஸில் பெட்டி படுக்கை சகிதம் திடுதிப்பென்று வந்து குதித்துவிட்ட சுந்தரத்தை பார்த்து ஆச்சரியத்தோடு கேட்டாள் நாகம்மாள். ‘ஆமாம்! முதல் மாதக் காசு மாத்திரம் கட்டிப் போட்டயள். இனி ரெண்டு மாசந்தான் பாக்கி! அம்மா… தூக்க ஏலாத சுமயத் தூக்கப் போனா இப்பிடித்தான் வரும். நான் அப்பவே சொன்னன். அந்தக் கள்ளுக் கடக்காறனுக்குக் கணக்கெழுதிற்றுக் கிடந்தாப் போதுமெண்டு. கேட்டீங்களா! மாதம் முப்பது …

நிராசை

கல்முனை பஸ்நிலையத்திலிருந்து சரியாக காலை 5.30 மணிக்கு தலை பஸ் புறப்பட்டது. பஸ் புறப்பட்ட ஆரவாரத்தில் பிரயாணிகள் தங்கும் மண்டபத்திலே சீமென்ற் தரையில் சுருட்டி முடக்கிக் கொண்டு கிடந்த சாகிப் நானா கண்விழித்துக் கொண்டார். கோயில் கிணற்றுக்குச் சென்று முகம் கழுவி விட்டு வந்து பக்கத்திலே இருந்த தேநீர்க்கடையிலே ஒரு கிளாஸ் தேநீரை வாங்கி சூடாக உறுஞ்சும் போதுதான் சாகிப் நானாவுக்கு சங்கரன் தாத்தாவுடைய நினைவு வந்தது. சாகிப் நானாவும் சங்கரன் தாத்தாவும் தொழிலில் பங்காளிகள். அப்படியென்றால்; பெரிய தொழிலகத்து முதலாளிகள் என்று கருத்தல்ல. …

முத்துலிங்கம் மேலே போகிறான்!

பொழுது விடிந்தது முதலே முத்துலிங்கம் பரபரப்பாக காணப்பட்டான். இன்றைக்கு அவனுக்கு நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு வரும். தொழிற்கந்தோர் நேற்றே கடிதங்களைத் தபாலில் சேர்த்துவிட்டதாக அடிக்கடி அங்கு போய்வரும் அவனுடைய நண்பன் அழகையா நேற்றே சொல்லியிருந்தான். இரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை. இன்னும் ஐந்து நாளில் நேர் முகப்பரீட்சை. அதற்குப் பின் ஆஸ்பத்திரியில் அரசாங்க ஊழியம். அதற்குப் பின் அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்பாடா என்று பெருமூச்சு விட்டான். காலைக் கடன்கள் முடிந்தன. அம்மா சங்குபதி அடுப்படியிலே பிட்டு அவித்துக் கொண்டிருந்தாள். பிட்டு வாங்க …