பலவீனம்!

என்னை ஒரு ‘பலவீனன்’ என்றுரைத்தாய் நண்பா இதிலென்ன ஆச்சரியம் அடடாவோ அடடா! இந்நிலத்து மாந்தரெலாம் ஏற்றுகிற மொழியாம் ‘இங்கிலீசு’ மொழியருமை என்னுளமும் ஒப்பும் மன்னுமறை வேதியரின் வேதமொழி யான மறைமொழியாம் சமஸ்கிரத மாண்புதெரிந் திடினும் என்னருமை தமிழ்த்தாய்க்கு இன்னொருத்தி ஈடோ என்றெண்ணும் பலவீனம் எனதுபல வீனம்! காதலுக்கு வாழ்த்துரைக்கும் கடியபல வீனம் களவாழ்வைப் போற்றுகிற கவிதைபல வீனம்! சாதலுக்கும் வாழ்வுக்கும் சலியாமல் எதையும் சமமாக ஏற்கின்ற சமத்வபல வீனம்! மேதைகளின் சரிதத்தை மென்மேலும் மேலும் மீட்டுகிற பலவீனம்! மேலும்உல கத்தே ஏதினிமேல் பலவீனம் இயம்பிவிடுவாய் …

சிலுவையும் செங்கோலும்!

ஏசுபிரான் சொன்னார் “இடதுபக்கக் கன்னத்தில் கூசாதடித்தவர்க்கே கொடுப்பாய் வலக்கன்னம்! நேசிப்பாய் நெஞ்சார நின்னயலில் உள்ளவனை பூசிப்பாய் மற்றுயிரைப் புண்ணியனே என்று கண்டு என்னதான் குற்றம் இழைத்தாலும் எவரையும் மன்னிப்பாய்! என்மகனே, மன்னிப்பாய்!” என்று உண்மையென்று ஆத்மா உடைய சிலர் மகிழ்வார் விண்ணர்கள் சொல்வார், விஷமச் சிரிப்போடு : ஆத்மாவாம் ஆத்மா! அடுப்படியில் போடுகொண்டு பூத்த புதுயுகத்தின் புத்தி அறுவடையை பார்த்துச் சகிக்காப் பழமை அழுகிறது ஆத்மாவாம் ஆத்மா! அடுப்படியில் போடுகொண்டு! மன்னித்தல் ஒன்றும் மனிதன் கலையன்று! மன்னித்தல் மாந்தர் இயலாமை! மண்டைகளில் நுண்மை அறிவால் …

Sleep

During the few hours I happened to live in this world, not even the smallest creature because of my vile deeds suffered; this sweet assurance, an elegant lullaby that warms my heart In that glow, a little milk, mixed with fruits; I stretch my limbs, a blanket covering me. When, having surrendered myself to that lullaby I forget myself in …

துயில்

இந்த உலகில் இருந்த சில நாழிகையில் எந்தச் சிறிய உயிரும் என் ஹிம்சையினால் நொந்தறியா… யாருமெனை நொந்ததிலை” என்கின்ற அந்த இனிய நினைவாம் அலங்கிர்தத் தாலாட்டுக் (கு) என்னிதயம் தந்து பழம் பிழைந்த பால் கொஞ்சம் ஊட்டப்பருகி, அதைத் தொடர்ந்து கால் நீட்டிப் போர்த்தேன் என் கம்பளியால். தாலாட்டில்… மாலாகி என்னை மறந்து துயில்கையில்…. வீண் ஒப்பாரி வைத்திங்(கு) உலகத்தைக் கூட்டாதே! அப்பால் நடப்பை அறிவேன்… அதை ரசிக்க இப்பயலை மீண்டும் எழுப்பித் தொலைக்காதே! தப்பாக எண்ணாதே தாழ்ப்பாளைப் பூட்டிவிடு! மேளங்கள் கொட்டி, என்றன் …

நன்றி

மாணிக்க கங்கையில் பாய்ந்தேனும், மாயை மலங்கழுவிக் காணிக்கை யாக்கக் கருதி, நடந்து கதிரைமலை யானிடம் போகிற வீரப்பனென்ற அப்பாவியினை தீனென்று கொத்தித் திருகிய பாம்பினைத் தேடுகிறார். நன்றியைக் கொன்றவன் நஞ்சு மனத்தின் நகலினைப்போல் கன்னங் கரிய இருளில், வீரப்பனின் கால் உசும்ப, பின்னாலே வந்த புடையன், எலியென்று பேய்ப்பசியில் புண்ணியம் தேடப் புறப்பட்ட காலினைப் பொத்தியதாம்! ‘உஞ்ச விருத்தி எடுத்த உணவினை உண்ணவிலை! பஞ்சமா பாதகம்! பாம்பா கடித்தது? பாவமப்பா!’ நெஞ்சில் பிறவாத செஞ்சொற்கள் வீசி நெகிழ்ந்துருகி அஞ்சலித்தார், தம் அனுதாபம்! போனார் அறிவுடையார்! …

எது வாழ்வு ?

மாமரங்கள் காய்த்து மருட்டும்; வளவெங்கும் பூமணமே தொக்கைப் புளிய மரங்களொடு நீண்டு வளர்ந்த நெடும் பனைகள்… ஆங்கொருபால் தோண்டாத சிற்றோடை, மேல் தொங்கு பாலமரமொன்று ஓடை மருங்கில் உயரா இளந்தெங்கு சோடிக்கும் நீழல் சுகத்தை நுகர்ந்தபடி மேற்கே திரும்புகிறோம், மேல்மாடி யோடமைந்து யார்க்கும்யாம் அஞ்சோம் எனுங்கர்ம வீரனைப் போல் நிற்கிறதே, வெள்ளை நிறத்திலொரு கட்டிடம்…. கற்பிக்கும் நுண்கலையைக் கற்றுப் பழக்குமிடம்! கண்டீர்; அது, எம் கலாசாலைப் போதனைறூம் இன்னுமொன்று கூறின் மிகையன்று, என்னவென்றால்…… பின்னேரமாகி மயண்டை பிறக்கையில் செல்வந்தர் வீட்டில் செழும்பாலும் சோறும்போல் இல்லையெனினும், …

பரிவு

நான் நடந்து போவதனை நாணமுற நோக்கிப்புன் நகைய ரும்பி ‘ஏன் நடந்து போகின்றீர்? எங்கே உம் வண்டி?’ என இரக்கத் தோடு தான் வியந்து கேட்டீர் இத் தள்ளாத பருவத்தும் தமிழ்வா சிப்பீர்! ஏன் நடக்கக் கூடாது? என் பெயர்தான் ‘நடைராசன்’ எழுத்தாளன்தான். இப்பொழுதும் புரிகிறதா என்னருமை வாசகரே? என்மட் டில் நீர் துப்புரவே; நும்முடைய தோளுக்கு பதிந்தவளைத் துணையாய்க் கொண்ட அப்பிழையைத் தவிர; அதும் தப்பன்று! வயதுமக்கும் அனுப தன்றோ? எப்படியும் கேட்டுவிட்டீர், இது போதும்; இலக்கியமிங்(கு) கினிமேல் வாழும். என்ன மச்சான் …

ஒரு நாள்

குறுகி இருள் பிரிகிறது குணதிசையில்; ஆழிக் குமரிபனிக் குளிர் முழுகிக் கொடுகிட, நீள் வானத் தறியிடை நுண் ஒளி இழைகள் தழைகிறது. தங்கச் சருகையொடு புடவைநெய அருணன் எழுகின்றான். வறியவரும் அணிதல்தகும் வடிவுமிகும் ஆடை வளர்கிறது; நொடியினிலும் அழிகிறது; மேகப் பறியிடையே உயிர்கருதிப் பதறியழும் மின்மீன்; பலபலெனப் பொழுதுமலர் விரியும்; எழில் சொரியும்! இளமையிலோர் குறைவுமிலை; இவள் அழகி; எனினும் இவளுடலோ சிறுகுடிசைப் புளுதியிலும் புரளும் உழவனிவள் கணவனதில் செழுமை கொளும் வயலாள்! உடையகலும் நிலைமைதனை விடியுமுனம் நாணி களவினொடு கனவுதிரும் விழிகளினில் இரவு, …

ஒருசொல்!

இதுவரை உலகிடை எவனொரு புலவனும் இசைத் திடா ததுவாய் – மக்கள் சுவைத்திடா ததுவாய் புது எழில் பொலிகிற கவிபுனை வழியினை நினைத்து மாளுகிறாய் – நெஞ்சம் கனத்து நீ ளுகிறாய் புழுதியில் ஒரு பிடி எனினும் இன் உணவெனப் புசித்து வாழுகிறாய் – இயற்கை வசத்தில் மூழ்குகிறாய். எழுதிய கவிதையில் வழுவறு பொருளினை இணைக்க நாடுகிறாய் – தோற்றே உனக்குள் மூடுகிறாய்! பல பல படையல்கள் மிக மிக அழகொடு படைத்த தாலெனவோ? – புகழ் கிடைத்த தாலெனவோ? சலசல எனுமொலி துடிநடை …

தீப்பள்ளயம்

சாப்பிட்டேன்; சற்றுச் சாய்ந்தெழுந் தாலன்றி சரிப்படாதெனும் சஞ்சலம் உட்புகக் கூப்பிட்டாளிவள், ‘கோயிலடி மட்டும் கொண்டு விட்டுப்பின் கூட்டி வரும்படி’ தீர்ப்புத் தான் இதற்கேது? மறுத்திடில் திட்டுத் தான்பிற கெட்டுநாள் மட்டிலும்! ஆப்பிட்டேன்; என்றன் “புத்திரச் செல்வங்கள்” ஆட்டம் பார்க்கக்கண் ஆயிரம் வேண்டுமே! பெட்டியென்ன விலை? இதைப் பார்க்கிலும் பெரிய தாக எடுதம்பி; ஓம் அந்தச் சட்டிக் கென்னதர அண்ணை? கைப்பிடிச் சருவப் பானையில் எவ்வள(வு) ஆக்கலாம்? வட்டா சின்னன், அரசிலை தொங்கினால் வடிவு! என்பவர் வார்த்தைப் பெருக்கமும் சட்டைச் சீலை விலையென்ன? கூடவே சாந்துப் …