பலவீனம்!

என்னை ஒரு ‘பலவீனன்’ என்றுரைத்தாய் நண்பா இதிலென்ன ஆச்சரியம் அடடாவோ அடடா! இந்நிலத்து மாந்தரெலாம் ஏற்றுகிற மொழியாம் ‘இங்கிலீசு’ மொழியருமை என்னுளமும் ஒப்பும் மன்னுமறை வேதியரின் வேதமொழி யான மறைமொழியாம் சமஸ்கிரத மாண்புதெரிந் திடினும் என்னருமை தமிழ்த்தாய்க்கு இன்னொருத்தி ஈடோ என்றெண்ணும் பலவீனம் எனதுபல வீனம்! காதலுக்கு வாழ்த்துரைக்கும் கடியபல வீனம் களவாழ்வைப் போற்றுகிற கவிதைபல வீனம்! சாதலுக்கும் வாழ்வுக்கும் சலியாமல் எதையும் சமமாக ஏற்கின்ற சமத்வபல வீனம்! மேதைகளின் சரிதத்தை மென்மேலும் மேலும் மீட்டுகிற பலவீனம்! மேலும்உல கத்தே ஏதினிமேல் பலவீனம் இயம்பிவிடுவாய் …

சிலுவையும் செங்கோலும்!

ஏசுபிரான் சொன்னார் “இடதுபக்கக் கன்னத்தில் கூசாதடித்தவர்க்கே கொடுப்பாய் வலக்கன்னம்! நேசிப்பாய் நெஞ்சார நின்னயலில் உள்ளவனை பூசிப்பாய் மற்றுயிரைப் புண்ணியனே என்று கண்டு என்னதான் குற்றம் இழைத்தாலும் எவரையும் மன்னிப்பாய்! என்மகனே, மன்னிப்பாய்!” என்று உண்மையென்று ஆத்மா உடைய சிலர் மகிழ்வார் விண்ணர்கள் சொல்வார், விஷமச் சிரிப்போடு : ஆத்மாவாம் ஆத்மா! அடுப்படியில் போடுகொண்டு பூத்த புதுயுகத்தின் புத்தி அறுவடையை பார்த்துச் சகிக்காப் பழமை அழுகிறது ஆத்மாவாம் ஆத்மா! அடுப்படியில் போடுகொண்டு! மன்னித்தல் ஒன்றும் மனிதன் கலையன்று! மன்னித்தல் மாந்தர் இயலாமை! மண்டைகளில் நுண்மை அறிவால் …