பாவம் மாஸ்டர் (குறும்புக் கதை)

“பிள்ளைகளே. இன்று நான் சொல்லப்போகும் குறும்புக் கதையைக் கேட்டுவிட்டு உங்களில் யாராவது சிரிக்காமல் இருந்தால் முதுகுத் தோலை.. உரித்து விடுவேன்! கவனம்!”

இவ்வாறு காப்புக் கூறிக் கதையைத் தொடங்கினார் க .க. க. ஆசிரியர். முதலாம் கானாவுக்கு கறுப்புச் சுறுட்டு என்றும், இரண்டாம் கானாவுக்கு கடலைக் கொட்டை என்றும், மூன்றாங் கானாவுக்கான கந்தப்பர் என்ற அவரது இயற்பெயரையும் கூட்டினால் கறுப்புச் சுறுட்டுக் கடலைக் கொட்டைக் கந்தப்பு மாஸ்டர் என்று அவரை நாம் அழைப்போம்!

ஆசிரியர் க.க.க. சிரிக்காத விஷயம் இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது.

ஒருநாள் அவரது மனைவி செத்துப்போய்விட்டதாகத் தந்தி கிடைத்தது. தந்தியை வாசித்தாரோ இல்லையோ. வகுப்பிலிருந்த பிள்ளைகளைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினரே மனுஷன். அது பெரிய பரிதாபம் போங்கள்! நல்லதோ கெட்டதோ! அவர் அப்படித்தான் சிரிப்பார். அதனால் சதா சுருட்டுக் குடிப்பதற்காக கறுப்புச் சுருட்டுப் பட்டமும், கடலைக் கொட்டை கொறிப்பதற்காக கடலைக் கொட்டையென்றும் பட்டமளித்துக் கௌரவித்த மாணவர் பட்டாளம் அவருக்குச் ‘சிரிப்புச் செல்வர்’ என்றும் பட்டம் தருவார்கள் என்று எதிர்பார்த்தார். பாவம் மாணவர்களுக்கு அது விளங்கவில்லை. அதனால் என்ன? அவர் தனக்குத் தானே ‘சிரிப்புச் செல்வர்’ பட்டம் கட்டிக்கொண்டு வெகுகாலம்!

தான் பென்ஷனுக்குப் போவதற்கு முன்னால் ஒருமுறையாவது இந்த மாணவர்களைச் சிரிக்கப் பண்ணிவிட்டுத்தான் போவேன் என்ற ஒரு வைராக்கியத்தோடுதான் அவர் கதை சொல்லி வருகிறார்… கதைகள் சோக்கான கதைகள்! ஆனால் அதைக் கேட்டுவிட்டு இந்தப் பயல்கள் அம்மிக் குழவிகள்போல இருந்து விடுகிறார்கள்! இன்றைக்கு அவர் சொல்ல வந்த கதை, ஆங்கிலக்; குறும்புக் கதை.

“தங்கச்சுரங்கத்திலே, தோண்டிக் கொண்டிருந்தான் ஒரு தொழிலாளி. அவனுக்கு அன்று ஆயுள் முடிவு. அவனுடைய உயிரை எடுக்க எமன் வந்தான். (எருமையில் அவன் வரவில்லை. ஏன் என்றால் அவன் ஆங்கில எமன்.)

தொழிலாளி எமனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான். எமன் கழுத்தைப்பிடித்து நசித்துக் காண்பித்தான். “உனக்கு வேண்டிய மட்டும் தங்கந்தருகிறேன். என்னை விட்டுவிடு” என்றான் தொழிலாளி. தங்கத்தை வாங்கிக்கொண்டு வந்தவழியே பேசாமல் திரும்பி நடந்தான் எமன்!”

நல்ல குறும்பு! எப்படிக் கதை? ஏன் சிரிக்காமல் இருக்கிறீர்கள்? சிரியுங்கள்! சிரியுங்கள்! என்று சிரிப்பாகச் சிரித்துத் தள்ளினார், நமது சிரிப்புச் செல்வர் க.க.க. அவர்கள்.

ஒருவரும் சிரிக்கவில்லை. ஆசிரியருக்குக் கெட்ட கோபம் வந்து விட்டது. பிரம்பை எடுத்து விளாச ஆரம்பித்தார் அவர்.

தடியன் சூரசங்காரன் – அவனும் ஒரு மாணவன். துணிவோடு எழுந்தான்.

“இந்த மக்குக் கதையைக் கேட்டுச் சிரிக்க நாங்கள் என்ன மடையரா சேர்?” என்றான் அவன்.

“என்னடா சொல்கிறாய்?” என்றார் கு.சி.க.க.க (கூனாவென்றால் குறும்புக் கதை – சிரிப்புச் செல்வர் கறுப்புச் சுறுட்டுக் கடலைக் கொட்டைக் கந்தப்பு மாஸ்டர்)

“ தங்கமிருந்த இடத்துக்குப் போன அந்தத் தடிப்பயல் எமன், தானே வேண்டிய மட்டும் அள்ளிக்கொண்டு போகலாமே! கைக்கூலியாகச் சிறிது தங்கத்தைப் பெற்றுக்கொண்டு கடமையைச் செய்யாமல் திரும்பிய அந்த எமன், ஒரு மக்கு எமன்தான்! மக்குக் கதை சேர். அதைக் குறும்பென்று சொல்ல வந்தீங்களே. நீங்கள் ஒரு..” என்று நிறுத்தினான் சூரசங்காரன் .

“ஒரு மக்கு” என்று முடித்தார்கள் மற்ற மாணவர்கள்.

அதைக் கேட்டுவிட்டு அன்று முழுவதும் விழுந்து விமுந்து சிரித்தார் நமது மதிப்புக்குரிய

Leave a Reply