Sleep

During the few hours
I happened to live in this world,
not even the smallest creature
because of my vile deeds
suffered;
this sweet assurance,
an elegant lullaby
that warms my heart

In that glow,
a little milk,
mixed with …

துயில்

இந்த உலகில்
இருந்த சில நாழிகையில்
எந்தச் சிறிய உயிரும்
என் ஹிம்சையினால்
நொந்தறியா…
யாருமெனை நொந்ததிலை” என்கின்ற
அந்த இனிய நினைவாம்
அலங்கிர்தத்
தாலாட்டுக் (கு)
என்னிதயம் தந்து
பழம் பிழைந்த
பால் கொஞ்சம் ஊட்டப்பருகி,
அதைத் தொடர்ந்து
கால் நீட்டிப் போர்த்தேன்
என் கம்பளியால்.
தாலாட்டில்…
மாலாகி என்னை
மறந்து துயில்கையில்….
வீண் …

பலவீனம்!

என்னை ஒரு ‘பலவீனன்’ என்றுரைத்தாய் நண்பா இதிலென்ன ஆச்சரியம் அடடாவோ அடடா! இந்நிலத்து மாந்தரெலாம் ஏற்றுகிற மொழியாம் ‘இங்கிலீசு’ மொழியருமை என்னுளமும் ஒப்பும் மன்னுமறை வேதியரின் வேதமொழி யான மறைமொழியாம் சமஸ்கிரத மாண்புதெரிந் திடினும் என்னருமை தமிழ்த்தாய்க்கு இன்னொருத்தி ஈடோ என்றெண்ணும் பலவீனம் எனதுபல வீனம்!

காதலுக்கு வாழ்த்துரைக்கும் கடியபல வீனம் களவாழ்வைப் போற்றுகிற கவிதைபல …

சிலுவையும் செங்கோலும்!

ஏசுபிரான் சொன்னார் “இடதுபக்கக்
கன்னத்தில்
கூசாதடித்தவர்க்கே
கொடுப்பாய் வலக்கன்னம்!
நேசிப்பாய் நெஞ்சார நின்னயலில் உள்ளவனை
பூசிப்பாய் மற்றுயிரைப் புண்ணியனே என்று கண்டு
என்னதான் குற்றம் இழைத்தாலும் எவரையும்
மன்னிப்பாய்! என்மகனே, மன்னிப்பாய்!” என்று
உண்மையென்று ஆத்மா உடைய சிலர் மகிழ்வார்

விண்ணர்கள் சொல்வார், விஷமச் சிரிப்போடு :
ஆத்மாவாம் ஆத்மா! அடுப்படியில் போடுகொண்டு
பூத்த புதுயுகத்தின் …

வி.ஸி.மெம்பர் காசிநாதர்!

ஆரெண்டு தெரியுமா…? என்ன விளங்கல்லப் போல.. ஓம் ஓம். எங்கட படுவான் கரையில பேரான கிராமச்சங்கம்;. அதில ஒம்பதாம் வட்டாரத்துக்கு நான்தான் நம்பர்!

அதென்னத்தப் பேசி ஏதெண்டு சொல்லுவன்? ஒரு எலச்சன் நடத்தி முடிக்கிறத்துக்குள்ள மனிசண்ட சீவன் போயிரப் பாக்குது. பின்னென்ன பின்ன… எத்தின நாளா எடுத்த எடுப்பிது சோறா? தண்ணியா? வீடா? வாசலா? நித்திரையா? …

வண்ணக்கர் கண்ணாப் போடி

தவறணைக்குள்ள பிறந்து குடிகுடியெண்டு குடிக்கயள்… இன்னும் போத்தலோட அண்ணாந்து ஊத்தத் தெரியுதில்ல.. நீங்கெல்லாம் என்ன குடிக்கயள்…சை..!

நடுச்சாமத்தில – கோயிலுக்குப் பின்னால இந்தச் சூரப்பத்தக் காட்டுக்குள்ள.. கிளாசுக்கும் கோப்பைக்கும் எங்க போறது? எனக்கெண்டால் அந்த மண்ணாங்கட்டி ஒண்டும் தேவல்ல! ஆறு போத்தலையும் அண்ணாந்து ஊத்திப் போட்டு அசையாமல் இருப்பன்.

இந்தப் பனம்பழ மூளுக்குள்ள ஊத்தி அடியுங்க. …

போடிமகள் பொன்னம்மா

ஓமெண்றன்….

ஓலகங் கெட்ட கேட்டுக்கு!

எனக்கிந்தக் கத காலுகள் புடிக்காது கண்டயளோ!

என்ன கண்டறியாத கதகாலுகள்….

சொறிஞ்சிக்க நகமில்லாமக் கெடந்ததுக்கெல்லாம் ஒள்ளுப்பம் தராதலம் வந்திற்றெண்டாப்பல… இதுகளும் சந்தி சவையில பந்தி பாவாடையில மனிசன் மாஞ்சாதியெண்டு ஏறத்துவங்கிற்றாப்பல. இந்த ஊர உண்டாக்கினவன் ஆரு…? இதக்கட்டியாண்டவன் ஆரு..? நெனச்சிப் பாக்குதுகளா… ஓங்கா… காலங்கெட்ட கேட்டுக்கு! அதுகளுக்கு வந்த பவுசும் …

‘பசுநெய்’ விசுவலிங்கம்

நீங்க என்னப் பற்றி என்ன நினைச்சாலும் சரிதான் அதப்பற்றி எனக்கொண்டும் கவல கிடையாது.

ஏன்? எண்டு கேப்பியள். அது தான் தெரியுமே நம்மட போக்கு ஒரு தனிப்போக்கு எதுக்கும் கவலப்படாத போக்கு!

அண்டைக்குப் பாருங்க ஏறாவூர்ச் சந்தியில ஒரு கடக்காறன் வாற வரத்தில… வஸ்ஸ_க்குள்ள இருந்த என்ன வெளியால இழுத்துப் போட்டு மொங்கு மொங்கெண்டு மொங்கிப் …

தலம வாத்தியார் தம்பிராசா

தலம வாத்தியார் வேல பாக்கிற தெண்டால் அது லேசான காரியம் இல்லப் பாருங்க. பெரும் பொறுப்பு! உங்கட ஐடியா என்னவோ எனக்குத் தெரியாது. என்னப் பொறுத்தவரையில சொல்றன் அது பெரும் பொறுப்பான ஒரு பதவி!

ஒரு சில தலம வாத்திமார் சொல்றாங்க.. அது மிச்சம் சிம்பிள் எண்டு! அது சிலவேளையில உண்மையாகவும் இருக்கும். அப்படிச் சொல்றவங்க …

எழுத்தாளர் எலிக்குஞ்சனார்

என்ன மாஸ்டர் இப்படி? எங்கே போய்விட்டு வருகிறீர் ஓ..! இன்றைக்கு வெள்ளிக் கிழமையா.. சரிதான்…

எனக்கும் இன்று கயிறுதிரிக்கிற வேலை கிடையாது.. அதுதான் இப்பிடி வாசிகசாலைப் பக்கம் போய்விட்டு வரலாம் என்று புறப்பட்டேன். இப்பொழுது வாசிகசாலை பலே ஜோர்! ஏனென்று கேட்டால் அங்கு இப்பொழுதான் தரமான ஏடுகள் தருவிக்கப்பட்டு வருகின்றன. அதாவது ‘வல்லி’ ‘நஞ்சருவி’ ‘ஜல்தி’ …